மதுரை உயர்நீதிமன்ற ஸ்டாப்பிலேயே பஸ்கள் ஒழுங்காக நிற்பதில்லை-நீதிபதிகள் வேதனை
மதுரை: பேருந்து நிறுத்தங்களில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் முறையாக நின்று செல்லாதது தொடர்பாக வெளியான பத்திரிக்கைச் செய்தியை தானாக முன்வந்து வழக்காக ஏற்றுள்ள மதுரை உயர்நீதிமன்றக் கிளை, உயர்நீதிமன்றக் கிளை ஸ்டாப்பிலேயே பஸ்கள் நிற்பதில்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தில் பஸ் பாஸ் எடுத்துவராத மாணவி ஒருவர், அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துனரால் அவமதிக்கப்பட்டு பாதி வழியில் இறக்கி விடப்பட்டார். இதனால் மனம் உடைந்த அந்த அப்பாவி மாணவி, தற்கொலை செய்துகொண்டார்.
இதேபோல பட்டுக்கோட்டை அருகே பஸ் நிறுத்தத்தில் மாணவர் ஒருவர் அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் டி.முருகேசன்,எஸ்.நாகமுத்து ஆகியோர் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பஸ் நிறுத்தங்களில் அரசு பஸ்களை நிறுத்தி மாணவர்களை ஏற்றிச்செல்ல வேண்டும். இலவச பஸ் பாஸ் எடுத்து வராதவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது. பஸ்நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் சென்றால் போக்குவரத்துக் கழக பொது மேலாளரிடம் புகார் செய்யுமாறு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில்,செப்டம்பர் 22ம் தேதி மதுரை தல்லாகுளம் பஸ்நிறுத்த்தில் நிற்காமல் செல்ல முயன்ற பேருந்தில் ஏற முயன்ற ஒரு மாணவரின் கால் சிக்கி சேதமடைந்தது.
இதுகுறித்து நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தியை நீதிபதிகள் முருகேன், டி.ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தானாக முன்வந்து வழக்காக ஏற்றுள்ளது.
இதுகுறித்த விசாரணை பெஞ்ச் முன்பு வந்தபோது மதுரை, திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட தென்மண்டல அரசுப் போக்குவரத்துக்கழக பொது மேலாளர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
அப்போது நடந்த விவாதம்...
நீதிபதிகள்:நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும்,ஓட்டுநர், நடத்துனர்கள் அரசின் கொள்கையை உணராமல் செயல்பட்டு வருகின்றனர். கிராமப்புற மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பவே பெற்றோர்கள் அச்சப்படும் நிலை உள்ளது.
அரசு வழக்கறிஞர்:நடத்துனர், ஓட்டுநருக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளித்து விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தி சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறோம்.
நீதிபதிகள்: உயர் நீதிமன்றம் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்திலேயே பஸ்கள் நிற்காமல் செல்வது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. மாணவர்கள் அதிகம் நிற்கும் பஸ் நிறுத்தத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் பஸ் நின்று செல்வதை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறினர்.
பின்னர் இதுகுறித்து வெள்ளிக்கிழமைக்குள் விரிவான பதிலைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பொதுவாகவே அரசுப் பேருந்துகள், குறிப்பாக நகரப் பேருந்துகள் ஸ்டாப்பிங்குகளில் முறையாக நின்று செல்வதில்லை. சென்னை நகரில் மட்டுமே ஓரளவுக்கு பேருந்து நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்துகின்றனர். ஆனால் மதுரை போன்ற நகரங்களில் பஸ்களில் ஏற வருவோரை ஏதோ ஆடு மாடுகள் போலவே பெரும்பாலான டிரைவர்களும், கண்டக்டர்களும் கருதுகின்றனர்.
அதிலும் கல்லூரி, பள்ளி, ஏன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தங்களில் முறையாக பேருந்துகளை நிறுத்துவதில்லை. மாணவர்கள் பஸ்களில் ஏறினாலே முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் கண்டக்டர்களை மதுரையில் அதிகம் பார்க்கலாம். அந்த அளவுக்கு மாணவர்கள் ஓசி கிராக்கிகள் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களிடம் உள்ளது. இந்த நிலைக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை முடிவு கட்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications