For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு-இன்று முதல் தொடக்கம்

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

சென்னை சென்டிரலிலிருந்து மதுரைக்கு இந்த மாதம் 11, 18, 25-ந் தேதிகளிலும், அடுத்த மாதம் 1, 8-ந் தேதிகளிலும் உள்ள திங்கட்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

சென்னையிலிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 8.50 மணிக்கு மதுரை சென்றடையும்.

அதேபோல மறு மார்க்கத்தில்,இந்த மாதம் 12, 19, 26-ந் தேதிகளிலும், அடுத்த மாதம் 2, 9-ந் தேதிகளிலும் உள்ள செவ்வாய்கிழமைகளில் இரவு 9.10 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.10 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

சென்டிரலிலிருந்து புறப்பட்டாலும் இந்த ரயில் எழும்பூர் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X