சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்
செங்கோட்டை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் தென்னக ரயில்வே சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
அதன்படி இன்று 9ம் தேதி இரவு 8.20 மணிக்கு சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. நாளை 10ம் தேதி காலை 10.3 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையம் வந்தடைகிறது.
இதேபோல் மறுமார்க்கத்தில் 10ம் தேத பிற்பகல் 2.30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு 11ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சென்னை ரயில் நிலையம் போய் சேர்கிறது.
23ம் தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு 24ம் தேதி காலை 10.30 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையம் வந்தடைகிறது. 24ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 25ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சென்னை போய் சேர்கிறது.
30ம் தேதி இரவு 8.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு செங்கோட்டை வந்தடைகிறது. 31ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு செங்கோட்டையில் இருநது புறப்பட்டு நவம்பர் 1ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சென்னை ரயில் நிலையம் அடைகிறது.












Click it and Unblock the Notifications