ஷீலா தீட்சித்தை இழிவாகப் பேசிய நியூசிலாந்து டிவி தொகுப்பாளர் பால் ஹென்றி ராஜினாமா
டெல்லி: டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் குறித்தும், இந்தியர்கள் குறித்தும் மிகவும் இழிவாகவும், இனவெறியுடனும் பேசிய நியூசிலாந்து டிவி தொகுப்பாளர் பால் ஹென்றி நியூசிலாந்து டிவி (NZTV) நிறுவனத்திலிருந்து விலகியுள்ளார்.
ஷீலா தீட்சித்தின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று இனவெறியுடனும், இழிவாகவும் பேசியிருந்தார் பால் ஹென்றி. அதேபோல இந்தியர்களையும் படு கேவலமாக விமர்சித்திருந்தார். இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்தியாவிடம், நியூசிலாந்து பகிரங்க மன்னிப்பு கேட்டது. அதேசமயம், பால் ஹென்றி மீது நியூசிலாந்து அரசால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அது கூறியது.
இந்த நிலையில் தற்போது தனது வேலையை விட்டு விலகியுள்ளார் ஹென்றி. அதுகுறித்து அவர்கூறுகையில், எனது கருத்துக்கள் இரு நாடுகளுக்கிடையே பெரும் பிரச்சினையாகியிருப்பது எனக்கு வியப்பாக உள்ளது. ஒரு கட்டுப்பாட்டுக் கோட்டுக்குள்தான் நான் நடந்து வருகிறேன். சில நேரங்களில் நான் அதிலிருந்து வெளியே போயிருக்கலாம்.
நியூசிலாந்து நாட்டில் இனவெறி பிரச்சினை பெரிதாக நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. எனவே நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார் ஹென்றி.
ஆனால் தான் பேசிய பேச்சுக்காக ஷீலா தீட்சித்திடமோ, இந்திய அரசிடமோ, நியூசிலாந்து அரசிடமோ இந்த பால் ஹென்றி வருத்தமோ, மன்னிப்போ கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications