தடை நீக்கம்-ஆந்திராவுக்கு 200 லாரிகளில் பட்டாசுகள் சென்றன

சிவகாசியில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நடந்த வெடிவிபத்தில் 8 அதிகாரிகள் பலியானார்கள். இதை தொடர்ந்து தொழிற்சாலை ஆய்வக துறை நடத்திய அதிரடி சோதனைகளில் 28 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
மேலும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக அக் 14ம் தேதி வரை டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பட்டாசு இருப்பு வைக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அதேபோல, ஆந்திராவில் தாடே பள்ளி கூடம் என்னுமிடத்தில் அனுமதியில்லாமல் ஒரு வீடடில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலியாகினர்.
இதேபோல் தனுக் என்னுமிடத்தில் வீட்டில் தயாரித்த பட்டாசு வெடித்து 4 பேர் பலியாகினர். அங்கிருந்த மூலப்பொருட்களை சேகரித்து வைத்திருந்த தனுக் போலீஸ் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் போலீ்ஸ் நிலையம் தரைமட்டமானது. இதனால் பட்டாசுகளை இருப்பு வைக்க ஆந்திராவிலும் தடை விதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஆந்திராவில் அந்தந்த மாவட்ட நீதிமன்றத்தில் வியாபாரிகள் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில் பட்டாசு விற்பனைக்கான தடையை நீதிமன்றம் நீங்கியது. மேலும் ஆந்திரா மாநில அரசும் விபத்தின்றி பட்டாசு விற்பனையை நடத்துமாறு அனுமதி வழங்கியது.
அதனால் நேற்று முன்தினம் பட்டாசுகளை ஏற்றிய 200க்கும் மேற்பட்ட லாரிகள் சிவகாசியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு புறப்பட்டன. மேலும் 100 லாரி பட்டாசுகளை வியாபாரிகள் சேகரித்து வருகின்றனர். அதனால் சிவகாசியில் தற்போது பட்டாசுகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications