கேரள அருவியில் விழுந்து சென்னை இன்போசிஸ் என்ஜினியர் பலி
திருவனந்தபுரம்: கேரளத்தில் அருவியில் விழுந்து சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் பலியானார்.
சென்னை முகப்பேர் கோல்டன் காலனியை சேர்ந்த விஜயகுமார் இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கிருத்திகாவின் தாயார் டாக்டர் இந்திராணி.
இவர்கள் அனைவரும் தங்களது உறவினர்களுடன் கேரளாவுக்கு சுற்றுலா வந்தனர்.
ரயில் மூலம் கோழிக்கோடு வந்த அவர்கள் அங்கிருந்து ஒரு வேன் மூலம் வயநாடு காந்தன்பாறை நீர்வீழ்ச்சியை காணச் சென்றனர். அருவியில் குளித்தபோது இந்திராணி வழுக்கி அருவியில் விழுந்தார். அவரை காப்பாற்ற விஜயகுமாரும், கிருத்தாவும் முயன்றனர்.
அப்போது எதிர்பாரவிதமாக விஜயகுமார் 100 அடி பள்ளத்தில் உள்ள தடாகத்தில் விழுந்தார். அங்கிருந்த சுற்றுலா பயணிகள் இந்திராணியையும், கிருத்திகாவையும் காப்பாற்றினர். தொடர்ந்து விஜயகுமாரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களால் முடியவில்லை.
இதுகுறித்து கல்பெட்டா தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் தேடி விஜயகுமார் உடலை மீட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications