ஜனாதிபதி ஆட்சி விவகாரம்: எதியூரப்பாவை ஆதரிப்பாரா கருணாநிதி?
பெங்களூர்: கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குவதை எதிர்க்க தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆதரவையும் கோரப் போவதாக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.
பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் எம்எல்ஏக்களுடன் டெல்லிக்குக் கிளம்பிய எதியூரப்பா நிருபர்களிடம் பேசுகையில்,
நாங்கள் இன்று எங்கள் ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லி செல்கிறோம். அங்கு இன்றும், நாளையும் தங்கி இருப்போம்.
பாஜக தலைவர்களுடன் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கூடாது என வற்புறுத்துவோம்.
இது தொடர்பாக பாஜக ஆளும் 8 மாநிலங்களின் முதல்வர்களும் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளோம். கர்நாடகத்தில் கவர்னர் பரத்வாஜ் ஜனாதிபதி ஆட்சிக்கு சிபாரிசு செய்ததுள்ள பிரச்சனை குறித்து அதில் விவாதிக்கப்படும்.
இது ஒரு தேசிய விவகாரமாகும். ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களின் ஆதரவையும் திரட்ட போகிறேன். இதற்காக மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா, தமிழக முதல்வர் கருணாநிதி போன்றவர்களின் ஆதரவை கேட்பேன் என்றார்.
எந்த மாநிலத்திலும் ஆட்சியைக் கலைப்பதையும், ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குவதையும் திமுக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை நீக்க வேண்டும் என்று திமுக நீண்டகாலமாக கோரி வருவதும் குறிப்பிடத்தக்கது.
எம்எல்ஏக்கள் பதவி நீக்கம்-கருத்து கூற கருணாநிதி மறுப்பு:
இதற்கிடையே நேற்று கர்நாடக சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக நடந்த வாக்கெடுப்புக்கு முன் பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களை சபாநாயகர் போபய்யா தகுதி நீக்கம் செய்தது குறித்து கருத்துத் தெரிவிக்க முதல்வர் கருணாநிதி மறுத்துவிட்டார்.
இது குறித்து ஒரு ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், கர்நாடக சட்டசபையில் நேற்று நடந்த சம்பவங்கள் ஜனநாயகத்தை நம்புவோரின் இதயங்களில் வலியை உண்டாக்கியுள்ளதாகவும், சட்டசபையில் எதுவுமே ஜனநாயகப்படி தான் நடக்க வேண்டும், இது போன்ற சம்பவங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்றார்.
அதே நேரத்தில் 11 பாஜக எம்எல்ஏக்களையும் 5 சுயேச்சை எம்எல்ஏக்களையும் சபாநாயகர் டிஸ்மி்ஸ் செய்துவிட்டு ஓட்டெடுப்பு நடத்தியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதன்மூலம் எதியூரப்பா மீதான தனது தனிப்பட்ட அன்பை அவர் வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications