For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவகாசியில் இருந்து 170 லாரிகள் பட்டாசுகள் டெல்லி புறப்பட்டன

Google Oneindia Tamil News

சிவகாசி: சிவகாசியிலிருந்து தீபாவளி விற்பனைக்காக 170 லாரிகளில் பட்டாசுகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சிவகாசியில் 750 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி நடந்த விபத்தில் 8 அதிகாரிகள் பலியானதைத் தொடர்ந்து திரி தயாரிப்பு முடங்கியது. இதனால் சிறிய நிறுவனங்கள் பட்டாசு தயாரிப்பதில் சுணங்க நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே டெல்லியில் காமன்வெல்த் பேட்டிகள் கடந்த 3-ம் தேதி தொடங்கி வரும் 14-ம் தேதி வரை நடக்கிறது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பட்டாசுகளை இருப்பு வைக்க மத்திய அரசு தடை விதித்தது.

வழக்கமாக சிவகாசியில் இருந்து மே மாதமே பட்டாசுகள் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தடை காரணமாக 3 மாநிலங்களுக்கு பட்டாசு அனுப்புவதி்ல் சிக்கல் ஏற்பட்டது. இது தவிர ஆந்திராவிலும் இருப்பு வைக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் வரும் 14-ம் தேதி முடிவடைகிறது. வெளிநாட்டு வீரர்கள் வரும் 17-ம் தேதி வரை டெல்லியில் தங்குகின்றனர். அதனால் 18-ம் தேதி முதல் பட்டாசுகளை இருப்பு வைக்க 3 மாநில அரசுகளும் அனுமதி வழங்கியுள்ளன. இதை தொடர்ந்து நேற்றுமுன் தினம் மட்டும் சுமார் 170 லாரி பட்டாசுகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X