ஸ்பைஸ்ஜெட் பெரும்பான்மை பங்குகளை வாங்கினார் கலாநிதி மாறன்

Subscribe to Oneindia Tamil

Kalanidhi Maran
சென்னை: ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் மேலும் 20 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலம், அந்த நிறுவனத்தை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார் சன் குழும தலைவர் கலாநிநி மாறன்.

இதன் மூலம் ஸ்பைஸ் ஜெட்டின் தலைமைப் பொறுப்பு உள்பட முக்கிய பதவிகளில் யார் அமர வேண்டும் என்பதை கலாநிதி மாறனே தீர்மானிப்பார். மேலும் இந்த நிறுவனத்தின் தலைவராகவும் அவர் அமர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கலாநிதி மாறன் கல் ஏர்வேஸ் பிரைவேட் லிட் என்ற பெயரில் விமான நிறுவனத்தை ஏர்கெனவே தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் சார்பில் ஸ்பைஸ்ஜெட்டின் 37 சதவீத பங்குகளை சில மாதங்களுக்கு முன்பு வாங்கினார் கலாநிதி மாறன்.

இப்போது மேலும் 20 சதவீத பங்குகளை அவர் வாங்கியுள்ளார்.

இதற்கான நடைமுறைப் பணிகளை தொடங்கியுள்ளது ஈனாம் செக்யூரிட்டீஸ்.

கடந்த அக்டோபர் 9-ம் தேதி ரூ 47.25 வீதம் 7.42 சதவீத பங்குகளை வெளி மார்க்கெட்டில் வாங்கினார் கலாநிதி. இந்த பரிவர்த்தனை பங்குச் சந்தையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் உள்ள பங்குகளையும் அவர் வெளிச்சந்தையில் வாங்குகிறார்.

ஸ்பைஸ்ஜெட்டில் கூடுதல் பங்குகளை கலாநிதிமாறன் வாங்கிய செய்தி வெளியானதும் அந்த நிறுவனத்தின் பங்கு விலை 0.75 சதவீதம் உயர்ந்தது. இத்தனைக்கும் இன்று பங்குச் சந்தையில் 135 புள்ளிகள் சரிவு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+