யாஹூவை வாங்குகிறது ஏஓஎல்?

Subscribe to Oneindia Tamil

Yahoo
சான்பிரான்சிஸ்கோ: நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும யாஹூ நிறுவனத்தை ஏஓஎல் நிறுவனம் வாங்கக் கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

யாஹூவை மற்ற நிறுவனங்கள் வாங்க முயற்சிப்பது கடந்த மூன்று ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும்.

இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து யாஹூவின் பங்குகள் விலை 13 சதவீதம் வரை உயர்ந்தது.

2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் 47 பில்லியன் டாலருக்கு யாஹூவை வாங்க முயன்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் இப்போது யாஹூவின் மார்க்கெட் மதிப்பு முன்பு இருந்ததை விட 25 பில்லியன் டாலர் குறைந்துவிட்டது.

போஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களின் பக்கம் இளைஞர்களின் பார்வை திரும்பி்விட்டதால் யாஹூவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் யாஹூவை வாங்க ஏஓஎல் முயற்சிக்கிறது.

இதுகுறித்து வெளிப்படையாக இப்போது எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டன இரு நிறுவனங்களும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+