கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடிப்பத்தில் தாமதம் ஏன்?-ஓ.பி.

மதுரையில் அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா தலைமையில் வரும் 18 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு, மதுரை ஓபுளா படித்துறையில் இருந்து சைக்கிள் ஊர்வத்தை ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகம் இதுவரை கண்டிராத அளவும், நாடே திரும்பி பார்க்கும் வகையிலும், தி.மு.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதும் விதமாகவும், மதுரையில் ஜெயலிலதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, மணல் கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல் போன்ற மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியாத திறனற்றதாக தி.மு.க. அரசு உள்ளது.
மதுரையில் ஆளுங்கட்சி விழாக்களுக்கு மட்டும் பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருகைக்காக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை அதிகார துஷ்பிரயோகம் மூலம் தி.மு.க. அரசு அதை அகற்றியுள்ளது.
இ-மெயில் மூலம் முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடப்பட்டடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்திலுள்ளது கருணாநிதி தானே. அப்படி இருக்கும் போது கொலை மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடிக்க வேண்டியது தானே. அரசு இயந்திரங்கள் அவரிடம் தானே உள்ளது. ஏன் தாதமதம் என்றார் பன்னீர்.












Click it and Unblock the Notifications