காமன்வெல்த் போட்டி-100 பதக்கங்களை அள்ளுமா இந்தியா?
டெல்லி: காமன்வெல்த் போட்டியின் கடைசி நாளான இன்று இந்தியா 100 பதக்கங்களைப் பெற்று புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு பதக்க வேட்டையில் இந்த முறை பின்னி எடுத்து விட்டது இந்தியா. தங்கப் பதக்கங்களைப் பெற்றதில் மான்செஸ்டர் காமன்வெல்த் போட்டியில் நிகழ்த்தியிருந்த சாதனையை இந்தமுறை டெல்லியில் வைத்து முறியடித்து விட்டனர் இந்திய வீரர், வீராங்கனைகள்.
இந்த நிலையில் தற்போது 100 பதக்கங்களைப் பெறுமா இந்தியாஎன்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. தற்போது 36 தங்கம், 26 வெள்ளி, 34 வெண்கலப் பதக்கம் என 96 பதக்கங்களுடன் உள்ளது இந்தியா.
இதுவரை 2வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 3வது இடத்தில் உள்ளது. 2வது இடத்தை இங்கிலாந்துப் பிடித்துள்ளது. அது 37 தங்கப் பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது.
மேலும் 2 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றால் 2வது இடத்தைப் பிடிக்கலாம். மேலும் 4 பதக்கங்களை வென்றால் மொத்தம் 100 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைக்க முடியும்.
இறுதி நாளான இன்று இந்தியாவுக்கு ஹாக்கி மற்றும் பேட்மிண்டன் மூலம் தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.
மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் ஆட்டத்தில் சாய்னா மூலம் தங்கம் வரலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல, மகளிர் இரட்டையர் பிரிவில் ஜூவாலா கத்தா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி தங்கத்திற்கு முயலலாம்.
பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா 72 தங்கம், 50 வெள்ளி, 47 வெண்கலத்துடன் 169 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 37 தங்கம், 56 வெள்ளி, 45 வெண்கலத்துடன் 138 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது.
கடந்த மெல்போர்ன் (2006) காமன்வெல்த் போட்டியில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த முறை 3வது இடத்தில் உள்ளது. சற்று முயன்றால் 2வது இடத்தைப் பிடித்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications