பாஜக அரசுக்குக் கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான்-மொய்லி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாஜக அரசுக்குக் கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான். இந்த மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு எந்த கட்சியம் ஆட்சியில் நீடிக்க முடியாது என்று கூறியுள்ளார் மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.
கர்நாடக நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இது தற்காலிகமான வெற்றிதான். நிரந்தரமல்ல. இப்படி ஒரு மயிரிழை மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு எந்தக் கட்சியும் ஆட்சியில் நீண்ட காலம் நீடிக்க முடியாது. ஸ்திரமான ஆட்சியைத் தர முடியாது.
சட்டசபையில் நடந்த முதல் வாக்கெடுப்பின்போது பாஜக மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டது. இன்று நடந்தது அதன் தொடர்ச்சியேயாகும் என்றார் மொய்லி.












Click it and Unblock the Notifications