கொலை மிரட்டல் வழக்கில் காடுவெட்டி குரு நீதிமன்றத்தில் ஆஜர்
அரியலூர்: கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (35). பிரபல சாராய வியாபாரி. இவர் கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு சாராய வியாபாரத்தை நிறுத்தி விட்டார்.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் நலிந்தோர் மறுவாழ்வு நிதியை தனக்கு வாங்கித் தருமாறு வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவிடம் முறையிட்டார். இதற்கிடையே குணசேகரன் திடீரென அ.தி.மு.க. -வில் சேர்ந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த காடுவெட்டி குரு குணசேகரனை தரக்குறைவாக திட்டியதுடன், ஆயுதங்களால் தாக்கிக் கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகின்றது.
இது குறித்து வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு (50), படாநிலை ஊராட்சி தலைவர் நாகசுந்தரம் (45), பா.ம.க. நிர்வாகிகள் காமராஜ் (48), வீரப்பன் (37) ஆகிய நால்வர் மீது மீன்சுருட்டி போலீசார் கடந்த 2008-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கான குற்றப்பத்திரிக்கை ஜெயங்கொண்டம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு பெரம்பலூர் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கும், அதையடுத்து விசாரணைக்காக அரியலூர் விரைவு நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டது.
அரியலூர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்ட நால்வரும் ஆஜராகினர்.
பின்னர் விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications