முன் அறிவிப்பின்றி சேலம்-சென்னை விமான சேவை திடீர் ரத்து

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட தனியார் விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம் - ஓமலூர் அருகே உள்ள கமலாபுரம் விமான நிலையத்திலிருந்து செவ்வாய் மற்றும் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தனியார் நிறுவனம் சார்பில் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வந்தது.

கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி முதல் நடைபெற்று வந்த இந்த விமான சேவை நேற்று முதல் திடீரென ரத்து செய்யப்பட்டது.

சேலத்திலிருந்து சென்னை செல்லும் விமானம் முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இது குறித்து தனியார் விமான நிறுவன நிர்வாகிகளிடம் விசாரித்த போது, தற்போது பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றது. இதனால் தான் விமான சேவை ரத்து செய்யப்ப்டுள்ளது. இந்த பாராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் விமான சேவை வழக்கம் போல் நடைபெறும் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+