ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆசிட்டில் விழுந்து லாரி டிரைவர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆசிட்டில் விழுந்து லாரி டிரைவர் பலியானார்.
ஊத்துமலையைச் சேர்ந்த சுப்பையா மகன் கிருஷ்ணன். இவர் தூத்துக்குடியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 18-ம் தேதி துறைமுகத்தில் இருந்து ஆசிட் ஏற்றிக் கொண்டு சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்றார். அங்கு ஆசிட்டை இறக்கிக் கொண்டிருக்கையில் டேங்க் மீது ஏறி எவ்வளவு ஆசிட் இறக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க முயன்றார்.
அப்போது தரையில் கொட்டிக் கிடந்த ஆசிட்டில் விழுந்தார். உடல் வெந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார். அவரது உடல் நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
இதை அறிந்த நாம் தமிழர் இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் டிரைவர் சாவில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடலை கொண்டு செல்ல விடாமல் போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் தூத்துக்குடி டவுன் ஏ.எஸ்.பி. சோனால் சந்திரா, டி.எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications