திருப்பதியில் லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி, 3 பேர் படுகாயம்
திருமலை: திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அருகே நின்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 8-ம் தேதி முதல் நடந்துகொண்டிருக்கிறது. இதில் கலந்து கொண்டு கடவுளை தரிசிப்பதற்காக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அமலாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரராவ் (45) என்பவர் குடும்ப சகிதமாக திருப்பதிக்கு வந்தார்.
சுவாமி தரிசனம் எல்லாம் முடித்துவிட்டு நேற்று காலையில் ஊருக்கு செல்வதற்காக திருமலையில் உள்ள பாலாஜி பேருந்து நிலையத்தில் தன் குடும்பத்துடன் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது திருமலைக்கு வந்த மணல் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. லாரி வருவதைப் பார்த்த பக்தர்கள் அலறிக் கொண்டு நாலாபுறமும் ஓடினர். வெங்கடேஸ்வரராவ் தனது குடும்பத்தாருடன் சாலையின் நடுவில் இருந்த டிவைடரில் நின்றார். தாறுமாறாக ஓடிய லாரி டிவைடரை இடித்துத் தள்ளி வெங்கடேஸ்வரராவ் குடும்பத்தாரின் மீது ஏறியது. இதில் வெங்கடேஸ்வரராவ், அவரது மகன் மணி (7), மகள் துர்கா (3), உறவினர் வெங்கடரமணம்மாள் (55) ஆகிய 4 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த சுரேஷ், லட்சுமி, கிருஷ்ணவேணி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் சேர்த்தனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications