பொறாமையால் தம்பியைக் கொன்ற 24 வயது அண்ணன்
Subscribe to Oneindia Tamil
முசாபர்நகர்: தன்னை விட தன் தம்பி மீது பெற்றோர்கள் அதிகப் பாசம் வைத்திருந்ததால் பொறாமை அடைந்த அண்ணன் தம்பியைக் கொன்றுள்ளான்.
கொலையான அந்த சிறுவனுக்கு வயது 12 ஆகும். இக் கொலை தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அச்சிறுவனின் பெயர் தாரிக் அன்வர். கடந்த 5-ம் தேதி முதல் காணாமல் போன தாரிக் அன்வரின் உடல் கூக்ரா என்னும் கிராமத்தில் கிடைத்தது. இதையடுத்து தாரிக்கின் மூத்த சகோதரன் முகாதிர் (24) மற்றும் அவரின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் முகாதிர் பெற்றோர்கள் தன்னைவிட தன் தம்பி மீது அதிகப் பாசம் வைத்திருந்ததாகவும், அதனைப் பொறுக்க முடியாமல் தான் தாரிக்கை கொன்றதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications