மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு பெயர் எடுப்பதா?-நிதீஷ் குமாருக்கு பிரதமர் கண்டனம்

பீகார் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் இன்று பிரதமர் கலந்து கொண்டு பேசினார். அராரியா மாவட்டத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் பேசுகையில், மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை முவுமையாக செயல்படுத்த தவறி விட்டது நிதீஷ் குமார் அரசு. இந்தத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் பெயரை மட்டும் தானே எடுத்துக் கொண்டு தனது திட்டங்கள் போல காட்டி வருகிறார் நிதீஷ் குமார்.
இவை மத்திய அரசின் திட்டம் என்பதை அவர் மக்களிடமிருந்து மறைத்து வருகிறார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தை முறையாக அவர் அமல்படுத்தவில்லை. அதேபோல சிறுபான்மையிருக்கான மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தையும் அவர் முழுமையாக அமல்படுத்தவில்லை.
பீகாரில் அடிப்படைத் தேவைகளான மின்சாரம், சாலை வசதி, நீர்ப்பாசன வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்த மத்திய அரசு துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரூ.1000 கோடி சிறப்பு நிதியையும் ஒதுக்கியுள்ளோம்.
பீகாருக்கு கடந்த 2004 முதல் இன்று வரை ரூ. 6000 கோடியைக் கொடுத்துள்ளது மத்திய அரசு. 36 மாவட்டங்களுக்கு சிறப்பு உதவிகளையும் வழங்கி வருகிறோம்.
ஆனால் இந்த நிதியை நிதீஷ் அரசு முழுமையாக பயன்படுத்தவில்லை. அப்படி செய்திருந்தால் பீகார் மாநிலம் இந்நேரம் அடிப்படைக் கட்டமைப்புகளில் சிறந்து விளங்கியிருக்கும் என்றார் பிரதமர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications