காமன்வெல்த் ஊழல்-கல்மாடி உள்ளிட்ட 20 பேர் மீதான புகார்கள் குறித்து விசாரணை

காமன்வெல்த் போட்டிகள் முடிந்த கையோடு இந்த விசாரணை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக ஆடிட்டர் ஜெனரல் வி.கே.சுங்க்லு தலைமையிலான குழுவை மத்திய அஏரசு அமைத்துள்ளது. இந்த குழு மூன்று மாதங்களில் தனது விசாரணை அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பிக்கும்.
காமன்வெல்த் போட்டி தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையையும் அது ஆய்வு செய்யப் போகிறது. எதிலெல்லாம் முறைகேடு நடந்துள்ளது என்பதை தீவிரமாக கண்ணில் விளக்கெண்ணை ஆராயப் போகிறார்கள்.
மொத்தம் 20 பேர் குறித்து தீவிர விசாரணை நடைபெறவுள்ளது. இதில், போட்டி அமைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி, டெல்லி வளர்ச்சி ஆணையத் தலைவராக உள்ள துணை நிலை ஆளுநர் தேஜிந்தர் கண்ணா, முன்னாள் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளர் ராமச்சந்திரன், ஒருங்கிணைப்புக் குழு நிதிக் கமிட்டி தலைவர் சதுர்வேதி, மத்திய நிதியமைச்சக கூடுதல் செயலாளர் உள்ளிட்டோரும் அடக்கம். கேம்ஸ் வில்லேஜை தயாரிப்படுத்தியது டெல்லி வளர்ச்சி ஆணையம் என்ற வகையில், அதன் தலைவராக உள்ள துணை நிலை ஆளுநரையும் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
காமன்வெல்த் போட்டி தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே விளையாட்டு அமைச்சகம் சரிவர செயல்படவில்லை என்று கூறப்படுவதால் விளையாட்டு அமைச்சக சர்வதேச விளையாட்டுப் பிரிவு இணைச் செயலாளர் ராகுல் பட்நாகரும் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
போட்டி முழுக்க குழப்பத்தில் விழ முக்கியக் காரணமாக கருதப்படுபவர் சுரேஷ் கல்மாடி. இவரைத்தான் தற்போது பிரதமர் குற வைத்திருப்பதாக கருதப்படுகிறது. போட்டி முடிவடைந்ததும், பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை நேரில் அழைத்துப் பாராட்டினார் பிரதமர் மன்மோகன் சிங். இந்த நிகழ்ச்சிக்கு கல்மாடிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
விரைவில் காமன்வெல்த் போட்டி தொடர்பான நிதி முறைகேடுகள் உள்ளிட்ட அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications