அயோத்தி தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய முடிவு-தனி நபர் முஸ்லீம் வாரியம்
Subscribe to Oneindia Tamil

வாரியத்தின் கூட்டம் நேற்று லக்னோவில் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் அதன் உதவி பொதுச் செயலாளர் முகம்மது அப்துல் ரஹீம் குரேஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், அயோத்தி தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளோம்.
வாரிய கூட்டத்தில் இருவிதமான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. சிலர் பேச்சுவார்த்தை மூலம் கோர்ட்டுக்கு வெளியே வைத்து சுமூகத் தீர்வு காணலாம் என கருத்து தெரிவித்தனர். இருப்பினும் பெரும்பான்மையானோர் அப்பீல் செய்ய வேண்டும் என கருத்து வெளியிட்டனர் என்றார்.
இதன் மூலம் அயோத்தி விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்திற்கு மாறுகிறது.












Click it and Unblock the Notifications