காமன்வெல்த் போட்டி தொடர்பான எந்த விசாரணைக்கும் தயார்-கல்மாடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காமன்வெல்த் போட்டிதொடர்பான எந்தவிதமான விசாரணைக்கும் நான் தயார் என்று கூறியுள்ளார் போட்டி அமைப்புக் குழுத் தலைவரான சுரேஷ் கல்மாடி.
சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோரின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த ஆடிட்டர் ஜெனரல் சுங்க்லு தலைமையிலான விசாரணைக் குழுவை பிரதமர் அமைத்துள்ளார்.
இதுகுறித்து கல்மாடி கருத்து தெரிவிக்கையில், விசாரணைக்கு நான் தயார். பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ள கமிட்டிக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் நான் அளிப்பேன்.
அரசின் இந்த விசாரணை முடிவை நான் வரவேற்கிறேன். இந்த விசாரணை அனைத்து கோணத்திலும் நடைபெறும் என நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications