மத்திய அமைச்சரவை மாறுகிறது... இளைஞர்களுக்கு வாய்ப்பு!
டெல்லி: விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படுகிறது. இதில் இளம் எம்பிக்கள் சிலருக்கு அமைச்சர் பதவி அளிக்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார்.
மன்மோகன் சிங் வருகிற 24-ந்தேதி ஜப்பான் மற்றும் மலேசியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். அதற்கு முன்னதாகவே அமைச்சரவையில் இடம்பெறவிருக்கும் எம்பிக்கள் யார் யார் என்று முடிவு செய்துவிடுவார் பிரதமர் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் பிரதமர்.
மன்மோகன் சிங் வெளிநாடு சென்று திரும்பியதும் நவம்பர் 5-ந் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகிறார். நவம்பர் 9-ந்தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த முக்கிய நிகழ்வுகள் முடிந்ததும் அமைச்சரவை மாற்றத்தை அறிவிக்கிறார் பிரதமர்.
இப்போதுள்ளவர்களில் அமைச்சர்கள் ஜெயபால் ரெட்டி, எம்.எஸ். கில் ஆகியோர் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஜெயபால்ரெட்டி ஆந்திர மாநிலம் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர். எனவே அவரை மாற்றினால், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி தந்தாக வேண்டும் மன்மோகன் சிங்.
மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஜெயராம் ரமேஷ், ஹாண்டிக் ஆகியோரின் செயல்பாடுகளிலும் பிரதமருக்கு திருப்தி இல்லையாம்.
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு அமைச்சர் பதவி வழங்க பிரதமர் முடிவு செய்துள்ளார். அந்த கட்சியின் கொறடா சுதிப்பண்டோவத்யாயாவுக்கு இந்த முறை வாய்ப்புக் கிடைக்கலாம்.
பல்வேறு மாநிலங்களில் கட்சி மேலிட பொறுப்பாளர்களாக இருப்பவர்களும் அமைச்சர்களாக இருக்கின்றனர். ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறையில் இவர்கள் மந்திரி பதவிகளில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் குலாம் நபி ஆசாத், பிரிதிவிராஜ் சவுகான், வீரப்ப மொய்லி ஆகியோர் பதவியை இழப்பார்கள். அல்லது கட்சி மேலிட பதவியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
இன்னும் சில ஜூனியர் அமைச்சர்கள் செயல்பாடுகளும் சொல்லிக் கொள்கிறமாதிரி இல்லாததால் அவர்களும் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் சிலஸ அமைச்சர்களின் இலாகாக்களையும் மாற்றியமைக்க உள்ளார் பிரதமர். தேசியவாத காங்கிரஸின் பிரபுல் பட்டேல் தற்போது விமான போக்குவரத்து அமைச்சராக உள்ளார். இவருக்கு வர்த்தகத் துறை ஒதுக்கப்படலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications