தனியார் பள்ளி கல்விக் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும்: மாணவர்-பெற்றோர் கூட்டமைப்பு தீர்மானம்

இதைத் தொடர்ந்து கல்விக் கட்டண விவரங்களை வெளியிடாத சில தனியார் பள்ளிகளுக்கு தமிழக கல்வித் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தமிழ் நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்களை அடுத்து, தமிழக அரசு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை அமைத்து கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தது.
ஆனால் தனியார் பள்ளிகளோ எப்பொழுதும் போல் அதிகக் கட்டணம் வசுலித்து வருவதாக புகார்கள் வருகின்றன. அவ்வாறு அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெற்றோர்கள் தொடர்ந்து புகார் கூறுகின்றனர்.
இதற்காகவே பெற்றோர்கள் தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களும் கல்விக் கட்டணத்திற்காக போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி அலுத்துவிட்டனர். இந்நிலையில் இந்த கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள நவபாரத் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நேற்று நடந்தது.
அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரசு நிர்ணயித்துள்ள தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை அனைவரும் அறியும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
இந்தப் புதிய கட்டண விவரங்களை அனைத்து பள்ளிகளில் உள்ள தகவல் பலகைகளில் வெளியிட வேண்டும்.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை பின்பற்றாத பள்ளிகளை அரசே நடத்தும் என்று அறிவிக்க வேண்டும்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
கல்விக் கட்டண விவரங்களை பள்ளி தகவல் பலகையில் வெளியிடாத சென்னை சி.ஐ.டி. நகர் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர் ஜெசி மோசஸ் பள்ளி, கீழ்ப்பாக்கம் பெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆழ்வார்திருநகர் செயின்ட் ஜான்ஸ் பள்ளி ஆகிய 4 பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் தங்கள் தகவல் பலகைகளில் கல்விக் கட்டணத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications