For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுற்றுலா கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ்- முதல்வர் கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: சுற்றுலா வளர்ச்சிக்கழக பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் பணிபுரியும் குரூப்-சி, குரூப்-டி பணியாளர்களுக்கு அவர்கள் பெறும் சம்பளம் ரூ.10 ஆயிரத்திற்கு இருந்தால் போனஸ் வழங்கப்படுவதில்லை, முதல்வர் கருணாநிதி உத்தரவின்படி, இந்த விதிமுறை தளர்த்தப்பட்டு, சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் 478 குரூப்-சி, டி ஊழியர்களுக்கு 2009-2010-ம் ஆண்டுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது.

இதனால், சுற்றுலா வளர்ச்சிக்கழகத்திற்கு ரூ.40 லட்சத்து 15 ஆயிரம் செலவு ஆகும். சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் நிதிநிலை கடந்த 3 ஆண்டுகளாக முன்னேற்றகரமாக இருப்பதால் அதிகபட்ச தொகையாக 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X