பட்டாசு ஆலை விபத்து : குழந்தை பலி- ஊழியருக்கு 5 ஆண்டு சிறை
நெல்லை: சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் அழகுநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மனைவி காந்திமதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ரட்சகன் என்ற ஆண் குழந்தை இருந்தது. இருவரும் குருவிகுளம் அருகே உள்ள வாகைகுளத்தில் மணிராம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி காந்திமதி, தங்கபாண்டி ஆகியோர் குழந்தையுடன் பட்டாசு தொழிற்சாலைக்கு சென்றனர். அங்குள்ள வேப்பமரத்தடியில் தொட்டில் கட்டி குழந்தையை தூங்க வைத்துவிட்டு இருவரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தொழிற்சாலையில் காயவைக்கப்பட்டிருந்த வெடிகள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் குழந்தை ரட்சகன் படுகாயம் அடைந்து இறந்தது.
இதையடுத்து காந்திமதி கொடுத்த புகாரின்பேரில் குருவிகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த விருதுநகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் பீடி குடித்துவிட்டு நெருப்பை அணைக்காமல் போட்டதால் வெடிவிபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சக்திவேல், மணிராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) பிரபுதாஸ் சக்திவேலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், மணிராமுக்கு ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications