பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

மதுரை கூட்டத்தில் அவர் பேசுகையில், "கோவை கூட்டத்திற்கு 8 லட்சம் பேர் திரண்டதை பத்திரிகைகள் செதியாக வெளியிட்டிருந்தன. இதை பொறுக்க முடியாத கருணாநிதி, பத்திரிகைகளை மிரட்டினார். திருச்சி கூட்டத்திற்கு 18 லட்சம் பேர் திரண்டனர். இதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செதுவிட்டன.
என்னிடம் பேசிய வடமாநில தலைவர்கள், கோவை கூட்டம் குறித்து பாராட்டினர். ஆனால் திருச்சி கூட்டம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்ததுதான் காரணம். எனது கூட்டங்களுக்கு வாகனங்கள் தரக்கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். கருணாநிதி சொல்வதை ஊடகங்கள் கேட்காவிட்டால் அந்த ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களும் இதற்கு பயந்து கொண்டு கருணாநிதிக்கு ஆதரவாகவே செய்தி போடுகின்றன.
திருச்சி கூட்டத்திற்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டனர் என கருணாநிதி கூறினார். ஆனால் உண்மையில் கூட்டத்தை தடுப்பதற்காகதான் போலீசாரை அனுப்பினார். இந்த தடையை மீறி மக்கள் வெள்ளமென திரண்டனர். திருச்சி கூட்டத்தில் பணத்தை அள்ளி செலவழித்தார் கருணாநிதி. அப்படியும் கூட்டம் வரவில்லை. ஆனால் அதை 'ஆஹா... ஓஹோ...' என எழுதச் சொன்னார். தமிழகத்தின் பத்திரிகைகளுக்கு மனச்சாட்சி உண்டா, என அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.
கருணாநிதி மிரட்டல்களுக்கு பத்திரிகைகள் பயந்துவிட்டன. மதுரையின் பிரம்மாண்ட கூட்டம் பற்றி உண்மையான செதியை வெளியிடுகிறனவா என்று நாளை பார்த்தால்தான் தெரியும். எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை. மக்களை நம்பி உள்ளோம். தேர்தல் வரட்டும், மக்கள் முடிவு என்ன என்பது அப்போது தெரியும்...," என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications