நடத்தையில் சந்தேகம் - பெற்ற தாயை கொன்ற மகன்
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பெற்ற தாயை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் வீரமாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகப்பெருமாள். தலையாரி. இவரது மனைவி மாரியம்மாள்(38).
இவர்களுக்கு திருமால் முத்து(22), அய்யப்பன்(10) என்ற 2 மகன்களும், இசக்கியம்மாள்(19) என்ற மகளும் உள்ளனர்.
தாய் மாரியம்மாள் நடத்தையின் மீது சந்தேகம் கொண்டு மகன் திருமால் முத்து அடிக்கடி சண்டை போடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் மாரியம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த திருமால்முத்து அவருடன் தகராறு செய்துள்ளார். பின்பு அரிவாளால் தாயின் கழுத்தில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அங்கிருந்து தங்கை இசக்கியம்மாள், தம்பி அய்யப்பன் ஆகியோரை பைக்கில் ஏற்றிகொண்டு திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரத்திற்கு விரைந்தார். அங்குள்ள ஒரு தோட்டத்தில் அவர்கள் இருவரையும் விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் இசக்கியம்மாள் வீட்டில் நடந்த சம்பவம் பற்றி தனது தந்தை முருகப்பெருமாளுக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் இசக்கி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications