எல்டிடிஈ தடை நீட்டிப்பு பரிசீலனை கூட்டம்: வைகோ பங்கேற்கிறார்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ததற்கு போதிய காரணங்கள் இருகின்றனவா, இல்லையா என்பதை விசாரிப்பதற்காக சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பாயத்தின் கூட்டம் ஊட்டியில் இன்று நடக்கிறது. விடுதலைப்புலிகள் தரப்பில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ ஆஜராக உள்ளார்.
ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் காலை 11 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் தீர்ப்பாயத்தின் தலைவர் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் 13 உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
நீதிமன்றம் அனுமதி
இதற்கிடையே, இந்த தீர்ப்பாயத்தின் முன் விடுதலைப் புலிகளுக்காக வாதார அனுமதி வேண்டும் என்று வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆனால் வைகோ, நெடுமாறன் போன்றோர் தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம் என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications