திமுகவில் தேமுதிக பிரமுகர் ஐக்கியம் : ஸ்டாலின் பெருமிதம்
விழுப்புரம்: முன்னாள் தேமுதிக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் சுப்பராயலு தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
முன்னாள் தேமுதிக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் சுப்பராயலு தலைமையிலான தேமுதிகவினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இது குறித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,
திமுக அரசின் திட்டங்கள்தான் பல்வேறு தரப்பினரை திமுகவில் இணைய வைத்துள்ளது. தமிழகத்தில் குடிசைகளே இருக்கக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் கலைஞர் வீடு வழங்கும் திட்டம்.
இது உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத ஒரு அற்புதத் திட்டமாகும். 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும், என்றார்.


Click it and Unblock the Notifications
