தங்கம் விலை ரூ 312 குறைந்தது... கடைகளில் நிரம்பி வழியும் கூட்டம்!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் நிலையற்ற போக்கு காணப்படுகிறது. விலையில் அடிக்கடி ஏற்றத்தாழ்வு நிகழ்கிறது. பவுன் ரூ. 14 ஆயிரத்துக்கும் கீழ் இருந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து ரூ. 15 ஆயிரத்தை நெருங்கியது.
சென்னையில் ஒரு பவுன் 14 ஆயிரத்து 850 ரூபாயை நெருங்கிய தங்கம் மீண்டும் விலை குறைந்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ. 14 ஆயிரத்து 656 ஆக இருந்தது.
இந்த நிலையில் நேற்று பவுனுக்கு ரூ. 152 அதிகரித்து ரூ. 14 ஆயிரத்து 808 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு மேலும் ரூ. 312 அதிரடியாக சரிந்துள்ளது.
ஒரு பவுன் ரூ. 14 ஆயிரத்து 496 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 1812 ஆக விற்கிறது.
இன்று வெள்ளி ஒரு கிலோ ரூ. 35 ஆயிரத்து 860 ஆகவும், ஒரு கிராம் ரூ. 38.35 ஆகவும் உள்ளது
இந்த திடீர் விலைக் குறைவு, மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அனைத்து நகைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.












Click it and Unblock the Notifications