சென்னையில் 2 மணி நேரம் கொட்டிய மழை... சாலைகளில் வெள்ளம்!

வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது லேசாக மழை பெய்தது.
சென்னையில் நேற்று காலை சைதாப்பேட்டையில் அரை மணி நேரம் மழை பெய்தது. அதன்பிறகு வெயில் அடிக்க தொடங்கியது. பின்னர் மாலையில் மீண்டும் வள்ளுவர் கோட்டம் அருகே மேகமூட்டங்கள் திரண்டு மழை பெய்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. காலை 6 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் மழை பெய்ததால் ரோடுகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது.
இதனால் தாழ்வான பகுதிகளிலும் பள்ளங்களிலும் மழைநீர் தேங்கி கிடந்தது. நுங்கம்பாக்கம் பகுதியில் பெய்த மழையால் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதேபோல் கோயம்பேடு பஸ்நிலையம் முன்பு 100 அடி ரோட்டிலும் மழைநீர் தேங்கி முட்டளவுக்கு நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
அம்பத்தூர், புதூர் பகுதியிலும் ரோடு முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றதால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல புரசை வாக்கம், அயனாவரம், வியாசர்பாடி உள்பட பல பகுதிகளிலும் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இந்த மழை இன்று மாலையிலும், இரவிலும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை நுங்கம்பாக்கத்தில் 4.2 மி.மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 25.8 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications