50,000 பொதுத் துறை பணிகளை குறைக்கும் இங்கிலாந்து: 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 10 லட்சம் பேர் வேலை இழக்கவுள்ளனர். அடுத்த 4 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு செலவிடுவதை சுமார் 80 பில்லியன் பவுண்ட் வரை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் நடக்கும் மிகப் பெரிய குறைப்பாகும்.
இந்தத் தகவலை இங்கிலாந்து கருவூலத் தலைமை அதிகாரி டானி அலெக்சாண்டர் தெரிவித்தார்.
செலவைக் குறைக்கும் வகையில் வரும் 2014-15 ஆண்டுகளில் பொதுத் துறை ஊழியர்கள் 490,000 பேரை பணியில் இருந்து நீக்கப்படும் என்று பட்ஜெட் பொறுப்பு அலுவலகம் கணித்துள்ளது.
வரும் வாரங்களில் ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகள் வேலை இழக்கவிருக்கின்றனர். அடுத்த 4 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு செலவிடுவதை சுமார் 80 பில்லியன் பவுண்ட் வரை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று அந்த ஆவணத்தில் இருந்தது.
பொதுத் துறை ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் சம்பளம் முடக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டில் இருந்து அவர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு அதிகம் கொடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை அதிகாரி ஜார்ஜ் ஆஸ்பர்ன் அரசின் விரிவான செலவு மறுபரிசீலனையின் விளைவுகள் பற்றி வரும் புதன்கிழமை அறிவிப்பார்.
நலத்திட்டங்களிலும் சுமார் 13 பில்லியன் பவுண்ட் குறைக்கப்படும் என்று அமைச்சர்கள் அறிவிக்கவிருக்கின்றனர். மொத்தத்தில் நலத்திட்ட சட்டவரைவில் அடுத்த 4 ஆண்டுகளில் 25 பில்லியன் பவுண்ட் வரை செலவுகள் குறைக்கப்படவுள்ளன.
இதன்படி சுகாதாரம், சர்வதேச முன்னேறத் துறைகளைத் தவிர அனைத்து அரசுத் துறைகளும் வரும் 2015-ம் ஆண்டிற்குள் செலவுகளை 40 சதவிகிதம் வரை குறைக்க வேண்டும். இந்த நடவடிக்கையால் நீதித் துறை மற்றும் உள்துறை நிதிகள் பெருமளவில் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications