கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க நெல்லை டி.ஐ.ஜி-க்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை: கல்லூரி மாணவரை தாக்கிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ படித்து வருபவர் ரமேஷ்.
இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது,
கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னையும், எனது நண்பர்கள் அலெக்ஸ், ராஜ்குமார், கார்த்திக் ஆகியோரை கல்லூரியில் படிக்கும் 30 மாணவர்கள் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் எனது கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து போலீசார் சாதாரண பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்களை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உரிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இது குறித்து விசாரித்து சரியான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய விசாரணை அதிகாரிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், காயம் அடைந்தவர்கள் டி.ஐ.ஜியை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications