லாரி மோதி கடம்பூர் தலைமை ஆசிரியர் பலி: மக்கள் சாலை மறியல்
நெல்லை: தாழையூத்து புறவழிச்சாலையில் டேங்கர் லாரி மோதியதில் அப்பகுதியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் பலியானார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சங்கர்நகர் தேவலாய தெருவைச் சேர்ந்தவர் அருள்ஜெகநாதன் மகன் அந்தோணி பால்ராஜ். இவர் கடம்பூர் தீர்த்தாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளி முடிந்த பின்னர் பேருந்தில் ஊருக்கு திரும்பியுள்ளார். தாழையூத்து நிறுத்தத்தில் இறங்கியவர் நான்குவழிசாலையை கடந்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது மதுரையில் இருந்து குரும்பூருக்கு வேகமாக சென்ற ஒரு டேங்கர் லாரி தலைமை ஆசிரியர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருக்கு அந்தோணியம்மாள் என்ற மனைவியும், மேரி, அமல் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். மதுரையைச் சேர்ந்த லாரி டிரைவர் கந்தசாமியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் புறவழிச்சாலையில் திரண்டனர். சுமார் 15 நிமிடங்கள் அங்கு மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தாழையூத்து
போலீசார் அங்கிருந்து பொதுமக்களை கலைந்துபோகச் செய்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications