ஹஜ் விசாவால் சிக்கல்-சவூதி விமான நிலையத்தில் தவித்த ஆந்திர அமைச்சர் திரும்பினார்
ஹைதராபாத்: தூதரக விசாவில் செல்வதற்குப் பதிலாக ஹஜ் விசாவில் சவூதி சென்ற ஆந்திர மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சையத் முகம்மது அகமதுல்லா ஜெட்டா விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல் 3 நாட்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது அவர் ஹைதராபாத் திரும்பி வந்து விட்டார்.
வந்தவர், தனக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும், வேண்டும் என்றே தனக்கு எதிராக இந்த செய்தியை சில டிவி நிறுவனங்கள் பரப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு ஆந்திர மாநில ஹஜ் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக அகமதுல்லா சவூதி சென்றார். ஜெட்டாவில் ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் உம்ரா பயணம் மேற்கொண்டார். பின்னர் 2 நாட்களுக்கு முன்பு ஜெட்டா திரும்பினார். அங்கிருந்து ஹைதராபாத் திரும்புவதாக திட்டம்.
இந்த நிலையில், அமைச்சர் அகமதுல்லாவை ஜெட்டா விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் ஹஜ் விசாவில் வந்திருப்பதால், விதிமுறைப்படி 45 நாட்கள் சவூதியில் தங்கியிருக்க வேண்டும். அதை மீறி அவர் செல்ல முடியாது என்று கூறி விட்டனர். இதனால் ஜெட்டா விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது அகமதுல்லாவுக்கு.
கிட்டத்தட்ட 3 நாட்கள் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டிருக்கிறார் அகமதுல்லா. சவூதி அதிகாரிகளிடம் தான் இந்தியாவின் ஆந்திர மாநில அமைச்சர் என்று விளக்கிக் கூறியும் அகமதுல்லாவை அனுப்ப அதிகாரிகள் மறுத்துள்ளனர். பின்னர் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டுள்ளார் அகமதுல்லா. அவர்கள் சவூதி அரசுடன் இதுகுறித்துப் பேசியுள்ளனர்.
தூதரக விசாவில் செல்லாமல் ஹஜ் விசாவில் சென்றதால்தான் அகமதுல்லாவுக்கு இந்த சிக்கல் ஏற்பட்டு விட்டது. ஏன் தூதரக விசாவில் அவர் செல்லவில்லை என்றால், அமைச்சருடன் அவரது மகன் மற்றும் இருவரும் வந்துள்ளனர். இத்தனை பேரையும் கூட்டிச் செல்வதாக இருந்தால் தூதரக விசாவில் செல்ல முடியாது. இதனால்தான் ஹஜ் விசா மூலம் தனது மகன், உள்ளிட்டோரை அழைத்து வந்துள்ளார் அமைச்சர். அதுவே தற்போது சிக்கலாகி விட்டது.
ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அமைச்சர் அகமதுல்லா தனது பயணத்தை முழுமையாக முடித்து விட்டார். ஹைதராபாத் திரும்புகிறார் என்று ஆந்திர அரசு விளக்கியிருந்தது.
இந்த நிலையில், அகமதுல்லா தற்போது ஹைதராபாத் வந்து விட்டார். சர்ச்சை குறித்து அவர் கூறுகையில், அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அதுபோன்ற செய்திகள் வதந்தியாகும். இந்த செய்தியைப் பரப்பிய டிவிகள் மீது வழக்கு தொடருவேன் என்று கூறியுள்ளார் அகமதுல்லா.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications