ஜெயப்பிரகாஷ் நாராயணனைப் போல ராகுல் காந்தி-காங். தலைவர் ஒப்பீடு
டெல்லி: நாட்டின் இளைஞர்கள் குறித்து முன்பு ஜெயப்பிரகாஷ் நாராயணன் கவலைப்பட்டார். இப்போது ராகுல் காந்தி அந்த இடத்தை நிரப்பியுள்ளார் என்று கூறியுள்ளார் பீகார் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மோகன் பிரகாஷ்.
ஜெயப்பிரகாஷ் நாராயணன், இந்திரா காந்தியை எதிர்த்து தீவிரமாக அரசியல் புரிந்தவர். இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சிக்கு எதிராக நாடு முழுவதும் தீவிரமாக செயல்பட்டவர். இந்திரா காந்திக்கு எதிராக இயக்கமே நடத்தியவர். இந்த நிலையில், ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் ராகுல் காந்தியை பீகார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஒப்பிட்டுப் பேசியிருப்பதால் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மோகன் பிரகாஷ் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல் காந்தி, இளைஞர்களின் நலன், தேவைகள், எதிர்காலம் குறித்து பெரும் கவலையுடனும், அக்கறையுடனும் உள்ளார்.
நேருவுக்குப் பின்னர் குழந்தைகள், மாணவர்கள் நலன் குறித்து அக்கறை காட்டியவர் அப்துல் கலாம். அதேபோல ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்குப் பிறகு நாட்டின் இளைஞர்கள் குறித்து அக்கறை காட்டி வரும் ஒரே தலைவர் ராகுல் மட்டுமே.
பீகார் தேர்தல் பிரசாரத்தில் அவர் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவில்லை. மாறாக நாட்டின் வளர்ச்சி, இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மட்டுமே பேசி வருகிறார். இது பீகார் இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பொறுக்க முடியாமல் ராகுல் காந்தி மீது எதிர்க்கட்சியினர் அவதூறாகப் பேசி வருகின்றனர் என்றார் பிரகாஷ்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications