கலைஞர் வீடு கட்டும் திட்டப் பணிகளுக்கு காலஅவகாசம் வேண்டும்: வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை
திண்டுக்கல்: கலைஞர் வீடு கட்டும் திட்டப் பணிகளுக்கு காலஅவகாசம் வழங்கக் கோரியும், உரிய பணியிடங்கள் கேட்டும் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஏழை எளிய மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை நிறைவேற்றித் தர வருவாய்த்துறை அலுவலர்கள் தயாராக உள்ளனர்.
ஆனால் இப்பணிகளைச் செய்ய உரிய கால அவகாசம் வழங்கப்படாமலும், உரிய பணியிடங்கள் வழங்கப்படாமலும் இருக்கின்றன. இந்த நிலையில் வீடு கட்டும் பணிகளை துரிதமாக முடிக்கக் கோரி ஊழியர்களை அரசு நிர்பந்தித்து வருகிறது.
எனவே, கலைஞர் வீட்டு கட்டும் திட்டத்திற்கு அனைத்து வட்டாட்சியர் அலுவலங்களுக்கும் தலா ஒரு வட்டாட்சியர், ஒரு துணை வட்டாட்சியர், ஒரு வருவாய் ஆய்வளர், ஒரு தட்டச்சர், ஒரு நில அளவர் பணியிடங்கள் வழங்க வேண்டும்.
இப்பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு ஒரு வட்டாட்சியர் தலைமையில் ஒரு அலகு பணியிடங்கள் அனுமதித்து ஆணையிட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களின் முன்பும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications