என்.எல்.சி. தொழிலாளர்கள் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்-ஏ.ஐ.டி.யு.சி. குற்றச்சாட்டு
நெய்வேலி: என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலாளர் எஸ். எஸ். தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நிர்வாக தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சங்கத்திடம் ரகசிய உடன்பாடு செய்து கொண்டு தொழிலாளர்களின் போராட்டத்தை பிளவுபடுத்த முயற்சி செய்கிறது. ஆனால், அந்த சதி வெற்றி பெறவில்லை.
தமிழக முதல்வர் கருணாநிதி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனைக்குத் தீர்வு காண பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறுவது பொறுப்பற்ற செயல். இது கண்டனத்திற்குரியது.
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு பேரணி, பொதுக் கூட்டம் நடத்தி மாவட்டம் தழுவிய ஆர்பாட்டத்தினையும் நடத்திய பிறகும் மத்திய அரசு தலையிடவில்லை.
இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கட்சியின் கடும் எதிர்ப்பையும், காவல்துறையின் அச்சுறுத்தலையும் மீறி பொது மக்கள், வணிகர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது வரவேற்கத்தக்கது.
ஆளும் திமுக கட்சி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எதிராகச் செயல்படுவதும், காவல் துறையின் அத்துமீறிய செயல்பாடும் தமிழக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications