வெளிநாட்டு வேலை-புதுக்கோட்டையில் முகாம்: அனைத்து மாவட்டத்தினரும் பங்கேற்கலாம்
புதுக்கோட்டை: வெளிநாட்டு வேலையை விரும்புபவர்கள் புதுக்கோட்டை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது.
தமிழக அரசுக்கு சொந்தமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் பதிவு செய்த மருத்துவர்கள், என்ஜினியர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், உடலுழைப்பாளர்கள், எலக்ட்ரிஷியன்கள் என பலர் வெளிநாட்டில் பணியாற்றி வருகின்றனர்.
வெளிநாடு செல்ல விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில், வெளிநாட்டு சிறப்பு பதிவு முகாம் அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு பதிவு முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பதிவு செய்யலாம்.
பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்கள், பாஸ்போர்ட் ஆகியவற்றின் மூன்று நகல்கள் மற்றும் நான்கு புகைப்படத்துடன் செல்ல வேண்டும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதிவு கட்டணமாக பட்டப் படிப்பு படித்தவர்கள் ரூ. 772-ம், மருத்துவர்கள் ரூ. 995-ம் செலுத்த வேண்டும்.
மேலும் விவரம் அறிய 99403 93617, 99529 40460, 94436 90272 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications