திருச்சி பாதிரியார் ராஜரத்தினம் மீது கட்டாயக் கருக்கலைப்பு வழக்கு-இதுவரை 3 வழக்குகள்
திருச்சி: திருச்சி பாதிரியாரும், செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் முதல்வருமான ராஜரத்தினம் மீது 3வதாக கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக புதிதாக ஒரு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த கட்டாயக் கருக்கலைப்பை நடத்திய பெண் டாக்டர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. மேலும், பாதிரியாரால் சீரழிக்கப்பட்டதாக கூறப்படும் கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரியை மிரட்டியதாக கூறப்படும் திண்டுக்கல் பாதிரியார், கருமாத்தூர் பாதிரியார், மதுரை பாதிரியார் ஆகியோர் மீதும் வழக்கு போடப்பட்டு உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் மேரி. கன்னியாஸ்திரியான இவர் அக்டோபர் 11ம் தேதி திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பாதிரியார் ராஜரத்தினம் மீது புகார் கொடுத்தார்.
அதில் தன்னை பாதிரியார் ராஜரத்தினம் பலமுறை கற்பழித்ததாகவுகம், கர்ப்பம் அடைந்ததால் கட்டாயமாக கருக்கலைப்பு செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து ராஜரத்தினம் தலைமறைவாகி விட்டார். அவர் மீது போலீஸார் கற்பழிப்பு, கொலை மிரட்டல் வழக்குகளைப் பதிவு செய்தனர். பிளாரன்ஸ் மேரிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கருக்கலைப்பு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து கட்டாயப்படுத்தி அவருக்கு கருக்கலைப்பு செய்ததாக ராஜரத்தினம் மீது புதிய வழக்குப் போடப்பட்டுள்ளது.
கட்டாயமாக கருக்கலைப்பு செய்த திருச்சி தென்னூரைச் சேர்ந்த ஒரு பெண் டாக்டர் மீதும் வழக்குப் பதிவாகவுள்ளது. இவர் மேரிக்கு 2 முறை கருக்கலைப்பு செய்துள்ளார். அப்போது பாதிரியார் தனது காரில் மேரியையும், அவரது சகோதரி மற்றும் தோழியை அழைத்து வந்து இந்த மருத்துவமனையில் விட்டுச் சென்றாராம்.
இது போக மேரி, ராஜரத்தினம் மீது புகார் கூறியபோது அவரை கடுமையாக மிரட்டியதாக கூறப்படும் மதுரை, கருமாத்தூர், திண்டுக்கல் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மூன்று பாதிரியார்கள் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது.
இதுதவிர கருக்கலைப்பு நடந்தபோது அதற்கு சாட்சியாக இருந்த மேரியின் சகோதரி, தோழி ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறவுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications