நர்சிங் மாணவி தற்கொலை முயற்சி-கைதான சீனியர் மாணவிகள் ஜாமீனில் விடுதலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ராகிங் கொடுமையால் நர்சிங் மாணவி தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் கைதான சீனியர் மாணவிகள் மூவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை ராஜாகுடியிருப்பைச் சேர்ந்த ராஜசேகர் மகள் முத்துசெல்வி(20). தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்த இவர் ராகிங் கொடுமையால் நேற்று முன்தினம் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து ஏ.எஸ்.பி. சோனல் சந்திரா விசாரணை நடத்தி முத்து செல்வியை ராகிங் செய்ததாக 3-ம் ஆண்டு மாணவிகளான கனகவல்லி, ஜெயராதா மற்றும் ரேவதி ஆகியோரை கைது செய்தார். பின்னர் அவர்களை தூத்துக்குடி முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் மாயகிருஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்க வைத்தனர்.
நேற்று கைதான மாணவிகளின் பெற்றோர் ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரணைக்கு ஏற்ற மாஜிஸ்திரேட் மூவருக்கும் ஜாமீன் வழங்கினார். இதையடுத்து போலீசார் மாணவிகளை பெற்றோருடன் செல்ல அனுமதித்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications