பணியாளர்களுக்கு சம்பளம்... இழுத்தடிக்கும் ஏர் இந்தியா!

இதனால் விமானிகளும், பணியாளர்களும் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஏர் இந்தியா நிர்வாகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், அந்த நிறுவனத்துக்கு கணிசமான நிதி உதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இரு தவணைகளாக நிதியும் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளத்தின் பெரும்பான்மைத் தொகையை இன்னமும் வழங்கவில்லையாம்.
விமானிகளின் சம்பளத்தில் 80 சதவீதம் சிறப்பு அலவன்சுகளே என்றும் இதை கடந்த 5 மாதமாக ஏர் இந்தியா வழங்காமல் உள்ளதாகவும் விமான ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நிர்வாகப் பணியாளர்கள், விமான பொறியாளர்கள் என பலதரப்பு ஊழியர்களுக்கும் 5 மாதங்களாக இதே நிலைதான் என்கிறார்கள்.
"இத்தனைக்கும் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து விமான டிக்கெட்டுகளின் விற்பனை கணிசமாக உயர்ந்து, நிறுவனத்துக்கும் லாபம் கிடைக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் இந்த மாதமும் சம்பளம் 15 நாள் தாமதமாகவே கிடைக்கும் என்கிறார்கள். இது பண்டிகைக் காலம். இப்படி இழுத்தடித்தால் எப்படி?" என புகார் தெரிவித்துள்ளனர் பணியாளர்கள்.
இந்த நிலை தொடர்ந்தால், பணியாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரமாட்டோம் என நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட, உடனே, நவம்பர் 4-ம் தேதிக்குள் அனைத்து நிலுவைகளையும் தருவதாக உறுதியளித்துள்ளது ஏர் இந்தியா நிர்வாகம்.
"நிதிப் பற்றாக்குறை என்று புலம்பும் நிர்வாகம், இரண்டு சிஓஓக்களை ரூ 4.2 கோடி சம்பளத்தில் நியமித்துள்ளது. ஒரு தலைமைப் பயிற்சி அலுவலரை ரூ 1.2 கோடிக்கு நியமித்துள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தின் முதுகெலும்பான விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கு தரவேண்டிய சம்பளத்தைக் கூட முறையாகத் தர மறுப்பது ஏன்?" என்று கேட்டு நிர்வாகத்துக்கு கடிதமும் அனுப்பியுள்ளனர் ஏர் இந்தியா ஊழியர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications