ராமர் பிறந்த அயோத்தி நிலத்தை பிரிக்க முடியாது-ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
பிருந்தாவன் (உ.பி.): ராமர் பிறந்த அயோத்தி நிலத்தை பிரிக்க முடியாது. அந்த சக்தி இந்த உலகத்தில் யாரிடமும் இல்லை என்று கூறியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.
உ.பி. மாநிலம் பிருந்தாவனத்தில்நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தை யாராலும் பிரிக்க முடியாது. அந்த சக்தி இந்த பூவுலகில் யாரிடமும் இல்லை.
ராமருக்கு அவர் பிறந்த இடத்தில் கோவில் கட்டுவதையும் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. அங்கு கோ்வில் கட்டுவது என்பது உறுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை.
அயோத்தியில் ராமர்கோவில் இருந்தது என்பதை அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. அந்த இடத்தில் மாபெரும் ராமர் கோவில் அமையும் நாளை இந்துக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
நாட்டு மக்களை மன ரீதியாக சீர்குலைக்கும் எண்ணத்தில்தான் அங்கு இருந்த ராமர் கோவிலை இடித்துள்ளனர். அங்கு ராமர் கோவில் அமைவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.
ராமர் கோவில் வருவதற்கு அரசியல்வாதிகளும், அடிப்படைவாதிகளும் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். இந்தச் சூழ்நிலை மாறினால்தான் கோவில் கட்ட முடியும் என்றார்.
உடன் இருந்த வி.எச்.பி.தலைவர் பிரவீன் தொகாடியா கூறுகையில், ராமர் பிறந்த இடத்தில் மசூதி கட்டுவது என்பதை ஏற்க முடியாது. அங்கு மிகப் பெரிய ராமர் கோவில் கட்டப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் விஎச்பி சர்வதேச தலைவர் அசோக் சிங்கால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜக எம்.பி. சித்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications