5 லட்சம் பேரை பணி நீக்கம் செய்யும் பிரிட்டிஷ் அரசு!
Subscribe to Oneindia Tamil

இந்த தகவலை பிரிட்டிஷ் அரசின் செயலாளர் டேனி அலெக்ஸாண்டர் கூறியதாவக தி டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதாரம் சற்று மேம்பட்டு வருவதாக எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த செய்தி பிரிட்டிஷ் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அரசின் செலவை பாதியாகக் குறைக்க வேண்டும் என்ற இலக்கை எட்ட, அரசுப் பணியாளர்களைக் குறைப்பது முக்கியமான நடவடிக்கை என அரசும் தெரிவித்துள்ளது.
வரும் நாள்களில் ஒவ்வொரு அரசுத் துறையும் 40 சதவீத பணியாளர்களைக் குறைப்பதோடு, செலவுகளையும் கணிசமாக குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications