ஊழியர்களை போலீஸ் தாக்கியதால் கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
கோவை: கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் இருவரை போலீஸார் தாக்கியதால், மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்கில் குதித்தனர்.
கோவை, செல்வபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வெளியே அமர்ந்து சிலர் மது அருந்தியுள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார், கடை ஊழியர்கள் இருவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு வைத்து ஊழியர்களை போலீஸார் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து மாவட்ட கலெக்டரிடம் முறையிட டாஸ்மாக் ஊழியர்கள் முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து மாவட்டம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் குதித்தனர்.
கோவையில் மட்டும் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. பொள்ளாச்சி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
கவுண்டம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் முன்பு திரண்ட 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஊழியர்களைத் தாக்கிய காவல்துறையினரைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் டாஸ்மாக் அதிகாரிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படவே பிற்பகல் 12 மணியளவில் கடைகள் திறக்கப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications