நாங்கள் ஜாதிக் கட்சி என்றால் தேமுதிகவும் ஜாதிக் கட்சிதான்-சரத்குமார்
நெல்லை: சமத்துவ மக்கள் கட்சியை குறிப்பிட்ட ஜாதிக்கு சொந்தம் என கூறுபவர்கள் மற்ற கட்சிகளும் ஏதாவது ஒரு ஜாதியை மையமாக கொண்டுள்ளன என்பதையும் ஒப்பு கொள்ள வேண்டும். அப்படி பார்த்தால் தேமுதிகவும் ஜாதி கட்சிதான் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
சமத்துவ மக்கள் கட்சியின் பொதுகூட்டம் வள்ளியூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் சரத்குமார் பேசியதாவது,
தமிழகத்தி்ல் அரசியல் மாற்றம் தேவை என்பதற்காகதான் சமக துவக்கப்பட்டுள்ளது. கட்சி துவங்கும்போது பத்தோடு 11 என சிலர் நினைத்தனர். ஆனால் தமிழ் மக்கள் அறிவு, ஆற்றல் பெற வேண்டும் என்பதுதான் சமகவின் கொள்கை.
காவல்துறை சிறப்பாக செயல்பட வேண்டும். சரத்குமார் மகன் தப்பு செய்தால்கூட கைது செய்யலாம். பதவி ஆசை சமகவுக்கு கிடையாது. மக்கள் முன்னேற வேண்டும் என்பதுதான் சமகவின் ஆசை.
சமக தூத்துக்குடியில் அமைதி புயலாக கிளம்பியுள்ளது. இலவச திட்டங்கள் பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும். இதற்காக ஓட்டுகளை இழக்கவும் சமக தயாராக உள்ளது.
சமகவில் பதவிக்கு எனது குடும்பத்தினர் வரமாட்டார்கள். புதிய கட்சி ஆட்சியில் அமர வேண்டும். கூட்டணி இல்லாமல் சமக ஜெயிக்கும். கருணாநிதி ஒரு அரசியல் ஞானி.
சமகவை குறிப்பிட்ட ஜாதிக்கு சொந்தம் என கூறுபவர்கள் மற்ற கட்சிகளுக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதியை மையமாக கொண்டுள்ளன என ஒப்பு கொள்ள வேண்டும். அப்படி பார்த்தால் தேமுதிகவும் ஜாதி கட்சிதான்.
பதவிக்காக எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். சமக என்றும் மக்களுடன்தான் கூட்டணி அமைக்கும். மக்களுக்காக இறுதிவரை போராடுவேன். சமக இல்லாமல் யாரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications