தேவர் குரு பூஜை-30ம் தேதி ஜெயலலிதா பசும்பொன் வருகை
ராமநாதபுரம்: தேவர் குரு பூஜையையொட்டி வரும் 30ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பசும்பொன் வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 103வது ஜெயந்தி, 48வது குருபூஜை விழா வரும் 28,29,30ம் தேதிகளில் நடக்கிறது.
28ம் தேதி தேவரின் ஆன்மிக விழாவும், 29ம் தேதி அரசியல் விழாவும், 30ம் தேதி குருபூஜை விழாவும் கொண்டாடப்படுகிறது.
30ம் தேதி முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அஞ்சலி செலுத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ராஜ கண்ணப்பன், அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி.கோகுலஇந்திரா உள்பட ஏராளமான அதிமுகவினர் நேற்று முன்தினம் பசும்பொன் சென்றனர்.
அங்கு ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் இறங்கும் ஹெலிபேட் தளம் மற்றும் அங்கிருந்து தேவர் நினைவிடத்திற்கு செல்லும் வழிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் பார்த்திபனூரில் அதிமுகவினரின் ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. அதில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியில் 5,000 தொண்டர்களை ஈடுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications