தமிழகத்துக்கு காவிரி நீர்-அனைத்துக் கட்சியினருடன் எதியூரப்பா இன்று ஆலோசனை

தமிழகத்தில் குறித்த காலத்தில் மழை பெய்யாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால் சம்பா சாகுபடிக்கு நீரைத் திறந்துவிட முடியவில்லை. இதையடுத்து காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வருக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்து அவரச கடிதம் அனுப்பியது.
இது தொடர்பாக விவாதிக்க கர்நாடக சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டத்தை எதியூரப்பா இன்று கூட்டியுள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய எதியூரப்பா, காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. நீரைத் திறந்துவிடும் முன் கர்நாடகத்தில் காவிரி பாசன பகுதியில் உள்ள அணைக்கட்டுகளில் தண்ணீர் இருப்பு, கர்நாடகத்திற்கு குடிநீர் மற்றும் நீர்ப்பானத்துக்குத் தேவையான தண்ணீர் குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
கர்நாடகத்தின் நலன் பாதிக்கும் வகையில் அரசு செயல்படாது. எனவே தமிழக அரசின் கோரிக்கை பற்றி விவாதிக்க சட்டப்பேரவை அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளேன். தமிழகத்தின் கோரிக்கை குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
கர்நாடகத்தின் தேவையை கருத்தில் கொண்டே எந்த முடிவும் எடுக்கப்படும் என்றார்.
அப்போது உடனிருந்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், சம்பா பயிர் சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் இல்லாததால் நீரைத் திறந்துவிடுமாறு தமிழகம் கேட்டுக் கொண்டுள்ளது. நமது தேவைகளைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications