ராமர் கோயில் இயக்கத்துக்கு ஆதரவாக கையெழுத்திடவில்லை: திமுக எம்.பி. மறுப்பு

முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் தலைமையில் ஸ்ரீ அனுமன் சக்தி ஜாக்ரன் சமிதி மாவட்டப் பொறுப்பாளர்கள் கடந்த வாரத்தில் ஹெலன் டேவிட்சனை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
அந்தக் குழுவில் கன்னியாகுமரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். துணைத் தலைவர் சீனிவாச கண்ணன், விஸ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலர் காளியப்பன், வித்யா பாரதி மாநிலத் தலைவர் குமாரசாமி, ஆர்எஸ்எஸ் மகளிர் பிரிவைச் சேர்ந்த பிரேமா, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் செல்லன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அவர்கள் அளித்த மனுவி்ல், ராமஜென்ம பூமியை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும், இப்போது நிரந்தர பூஜை நடந்துவரும் இடத்தில் கோயில் கட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கியிருந்தன.
இந் நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு விஸ்வ இந்து பரிஷத் நாடு முழுவதும் நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து ஹெலன் டேவிட்சன் கையெழுத்திட்டதாக செய்தி வெளியானது.
இதையடுத்து அவருக்கு விளக்கம் கேட்டு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால், தான் விஎச்பிக்கு ஆதரவாக கையெழுத்திடவில்லை என்று ஹெலன் டேவிட்சன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,
மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் பலர் வந்து என்னிடம் மனு அளிக்கின்றனர். அதுபோலவே ஸ்ரீ அனுமன் சக்தி ஜாகரன் சமிதி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் தலைமையில் ஒரு குழுவினர் வந்து மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்டேன் என்பதை உறுதி செய்யும் விதத்தில் தான் கையெழுத்திட்டிருந்தேன்.
ஆனால், அதை சிலர் திரித்துச் செய்தி நான் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு கையெழுத்திட்டதாக செய்தி பரப்பியுள்ளனர். இது தொடர்பாக எனக்கு திமுக தலைமைக் கழகம் அனுப்பியுள்ள நோட்டீஸ் கிடைத்துள்ளது.
இதற்கு விரிவான விளக்கம் அனுப்பவுள்ளேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications